அரசு ஊழியர், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: ரூ.183 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

0 1

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’, ‘டி’ பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை துறைதோறும் பல முன்னோடி திட்டங்களை, எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.