திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலைபோக்குவரத்து நெரிசல்

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பள்ளி – கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் ஊழியர்களும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக, அனைத்து துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி களத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சாலை விபத்துக்களை தடுப்பதற்காகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செந்தணீர்புரம் வரை உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் புதிய தார் சாலை அமைத்து கூடுதலாக மாற்று சாலைகளை உருவாக்குவது, சாலையை கடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை சிக்னல் அமைப்பது, வெளிச்சம் குறைவான பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்க கூடுதல் மின் விளக்குகளை அமைப்பது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது அவற்றை புதுப்பிப்பது, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் பகல் வேலைகளில் கனரக வாகனங்களை துவாக்குடியில் இருந்து மாநகர சுற்றுச்சாலை வழியாக திருப்பி விடுவது, பால்பண்ணையில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலத்தின் அருகே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்துக்களை தடுக்கவும் சோதனை முறையில் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். மாநகர காவல் துணை ஆணையர் தெற்கு திரு.ஈஸ்வரன், இ.க.ப. திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்
திரு.சாலை தவவளன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திரு. நடராஜன், திரு. சுரேஷ் பாபு, மாநகராட்சி துணை ஆணையர் திரு.வினோத், உதவி ஆணையர் திரு. சரவணன், உதவி நிர்வாக பொறியாளர் திரு. ஜெகஜீவ ராமன், வட்டாட்சியர்கள் திரு. விக்னேஷ், திருமதி தனலட்சுமி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன்

