திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி நகராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 24.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இலால்குடி நகரம் திருச்சி-அரியலூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இலால்குடி நகராட்சியை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் உள்ள மக்கள் அவர்களின் அன்றாட தேவைக்காக இலால்குடி நகரை அணுகுவது அத்தியாவசியமாக உள்ளது. இதன் பொருட்டு இலால்குடி நகரில் தற்பொழுது உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் உள்ளது. புற நகர் பேருந்துகள் தற்போதைய பேருந்து நிலையத்தில் இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்திற்கு செல்லாமலே புறவழியாகவே செல்வதால் நகராட்சியின் வருமானம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். ஆகையால் இலால்குடி நகராட்சிக்கு ரூ.24.04 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசானை பெறப்பட்டு (21.11.2024) அன்று மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களால் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையம் 40 பேருந்து நிறுத்தங்கள் 120 கடைகள் 2 எண்ணிக்கை உணவகம், 2 எண்ணிக்கை ATM, 1 எண்ணிக்கை டிரைவர் தங்குமிடம், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம். இதர அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 5.32 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொண்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், இலால்குடி நகர் மன்ற தலைவர் திரு.துரை மாணிக்கம், ஆணையர் திருமதி.மா.புகேந்திரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

