DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்

DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் திருச்சி
தெற்கு மாவட்ட மாநகர விவசாய அணி சார்பாக கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வரவேற்புரை மாவட்ட தலைவர் மாரிமுத்து நிகழ்த்தினார் இந்நிகழ்விற்கு தலைமை மாவட்ட அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ரமேஷ்
மாநகர அமைப்பாளர் குறிஞ்சி மன்னன்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர கழக செயலாளர்
மு மதிவாணன்
மாநில அணி நிர்வாகி மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்
லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் மணிவேல் விஜயகுமார் வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் மாமன்ற உறுப்பினர் கீதா வட்டக் கழக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இறுதியாக நன்றியுரை மாநகர தலைவர் குமார் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட மாநகர விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

