கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

0 8

 

திருச்சி, ஜூலை 25 திருச்சியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் நீர் சேமிப்பு கதவணை  திட்டங்களை துவங்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர்நிலை ஆறுகளை பாதுகாக்க போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கிடப்பில் போடாமல் உடனடியாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்.

குடிநீர்,உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குளித்தலை வட்டம், மருதூர்,முசிறி வட்டம் உமையாள்புறம் இடையிலான காவிரி கதவணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். காவிரி – அரியாறு – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிதி ஒதுக்கிட்டு விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.