திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் உட்கோட்டம். முசிறி காவல் நிலைய குற்ற எண். 213/24, U/s 296(6), 103(1) 351(3) BNS (Old Sec. 294(1), 302, 506() IPC) வழக்கில் இறந்த நபரான பழனிச்சாமி 48/24 தபெ பெரன் குடித்தெரு கப்பட்டி, திருத்தியமலை. முசிறி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எதிரிகள்
1. உதன்டன் 76/24 த.பெ கதிவேண்டன் பட்டி திருத்தியமலை. முசிறி 2. அழகேசன் 45/24 உதண்டன்
3, ராஜமணி 65/24 க.பெ உதண்டன் ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு மற்றும் கிணற்றைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனையில் கடந்த 07.08.2024 அன்று விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த பழனிச்சாமியை எதிரிகள் அருவள் மற்றும் மரக்கட்டையால் தாக்கியதில் மேற்படி பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இவ்வழக்கு விசாரணையானது திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (PDJ) நடைபெற்று வந்த நிலையில் தரப்பு வழக்கறிஞராக திரு.சவரிமுத்து ஆராகி வாதிட்டு வந்தார். இந்நிலையில் இன்று (26.09.2025) திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி (PQJ) திரு.கிருஸ்டோபர் அவர்கள் எதிரி-1 உத்தண்டன் 70/24 த.பெ கரிவன்டன் எதிரி-2 அழகேசன் 48/24 த.பெ உத்தண்டன் எதிரி-3 ராஜாமணி 65/24 க.பெ உத்தண்டன் ஆகியோருக்கு ஆயுள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை ரூபாய். 500/- அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக முசிறி காவல் நிலைய காவல் ஆய்வார் திரு. செல்லதுரை மற்றும் நீதிமன்றகாவலர் திரு.நடரா பெண் தலைமை காவலர் திருமதி.கிருத்திகா ஆகியோரை திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திரு.செ.செல்வதரத்தினம், அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்

