திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை மூன்று நபர்கள் மரணித்த விபத்து வழக்கில் எதிரிக்கு 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

0 16

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஜீயபுரம் காவல் உட்கோட்டம்,பெட்டவாய்த்தலை காவல் ( στι. 19/24 U/s 279, 304(II) IPC @ 279,304(I) IPC. 109 r/w 194(1), 113(1) MV Act- (TRIPLE DEATH) வழக்கில் இறந்த அரவிந்த 28/24 த. பெ சுகுமாறன். திருப்பராய்த்துரை, ஸ்ரீரங்கம் என்பவர் TN 48 BD 3985 என்ற ஆட்டோவில் மற்ற இறந்த நபர்களான 1.சுசீலா 65/24 க.பெ சண்முகம், அணலை. ஸ்ரீரங்கம் 2. சரவணன் 40/24 த.பெ சண்முகம், -do- ஆகியோர்களை ஏற்றிக்கொண்டு கடந்த 29.02.2024 அன்று திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் KRR திருமண மண்டபம் அருகே சென்றபோது எதிரி -1 வெள்ளிராஜா 42/24 முருகேசன். பாரதி நகர். குளித்தலை. கரூர் (டிப்பர் லாரி டிரைவர். TN 47 R 5446 எதிரி-2. பாஸ்கர் 42/24 (வாகன உரிமையாளர்). த.பெ சுப்பிரமணியன், இலுப்பு கிணத்துப்பட்டி, பவித்திரம். பள்ள மருதப்பட்டி, கரூர் ஆகியோர் மேற்படி டிப்பர் லாரியை அஜாக்கிரதையாகவும். அதிவேகமாகவும் ஓட்டி வந்து மேற்படி இறந்த நபர்கள் பயணித்த ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில், மூன்று நபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

  1. இந்நிலையில் திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (23.09.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாதன் அவர்கள் எதிரி வெள்ளிராஜா என்பவருக்கு 30 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய். 3000-ம் அபராதம் விதித்தும், எதிரி-2 பாஸ்கர் என்பவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
  2. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் பெட்டவாய்த்தலை காவல் நிலைய நீதிமன்ற காவலர் திரு.ராகுல் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.காய அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.