மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நெல்லை மாணவன் முதலிடம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெயிட்ட பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர 7.5சதவீத இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மாணவன் முதலிடம்:
- * நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார்.
- * 655 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 2ம் இடம் பிடித்தார்.

