நவராத்திரி கொலு கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

0 6

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 52 வது வருட பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி
பண்டிகையை முன்னிட்டு 02.09.2025 முதல் 04.10.2025 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடைபெறுகிறது.

நவராத்திரி கொலு கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 02.09.2025 செவ்வாய் கிழமை இன்று குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மண்டல குழு தலைவர்
மு மதிவாணன் .
S. அமிர்தஜோதி, மேலான் இயக்குனர்
R. கங்காதேவி, மேலாளர் மற்றும்
பூம்புகார் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு அம்சமாக பலவித
கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரபாச்சி
பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின
கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.