உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி கிழக்கு. தெகுதி மாநகராட்சி மண்டலம் இரண்டு வார்டு எண் 30க்கு உட்பட்ட
பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
மேலும் இந்த முகாமிற்கு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து
4 பயனாளிகளுக்கு
1. வருவாய் துறையில் இலவச வீட்டு மனைப் பட்டா 1 நபருக்கு
2. நகராட்சி நிர்வாக துறை சார்பில் 1 நபருக்கு சொத்துவரி பெயர் மாற்றம் 2 நபர்களுக்கு புதிய சொத்து வரி விதிப்பு உத்தரவு
ஆகியவற்றை மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் இந்த முகாமில் மண்டலம் மூன்றின் தலைவர் மு. மதிவாணன் மண்டலம் 2 ன் தலைவர் ஜெய நிர்மலா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி கிழக்குத் தாசில்தார் விக்னேஷ் இணை ஆணையர் சாலை தவளவன் சுகாதார அலுவலர்கள் பாலமுருகன் டேவிட்
உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தமுகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43சேவைகளின்அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்று அதற்கு உடனடி தீர்வு எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்

