திருச்சியில் 17.08.2025 தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் 38-வது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்.
தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்
1.GST-வரி
தமிழகத்தில் ஆண்டிற்கு சுமார் 24 லட்சம் டன் உரம் விற்பனை மதிப்பு ரூ.3500/- கோடி. GST வரி வசூல் 5% மதிப்பு ரூ.175 கோடி விவசாயிகளுக்கு வழங்க கூடிய இடுபொருட்களுக்கு GST வரி விலக்கு அளிக்க கேட்டு கொள்கிறோம்.
2007-ல் VAT வரி அமுலுக்கு வந்தபொழுது விவசாய இடுபொருள்களுக்கு VAT 4% வரி போடப்பட்டதை நமது கலைஞர் ஆட்சிகாலத்தில் 2007-ல் வரி விலக்கு அளித்து விவசாயிகளுக்கு நன்மை செய்து. விவசாயிகளின் பாராட்டை பெற்று தந்தது அதே போல் நடைமுறையில் உள்ள GST வரியை விலக்கு பெற மத்திய அரசிற்கு உரிய பரிந்துரைசெய்ய கேட்டுக் கொள்கிறோம். (அல்லது)
தற்சமயம் உரத்திற்கு 5%. பூச்சிமருந்து 18%, ஆர்கானிக் 5%, நுண்ணூட்டம் 12% என்று இருப்பதை அனைத்திற்கும் ஒரே வரியாக 5 சதவீதம் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
2.டீலர் கமிஷன் :
பல ஆண்டுகாலமாக சுமார் 25 வருடங்களாக உரங்களுக்கு உற்பத்தி கம்பெனிகள். டீலர்களுக்கு கொடுத்துவரும் கமிஷன் தொகையை உயர்த்தி கொடுக்காமல், பழைய கமிஷன் தொகையினை வழங்கி கொண்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு நிர்வாக செலவுகள் இறக்குக்கூலி. ஏற்றுக்கூலி. கடை வாடகை போன்ற செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் எங்களது தொழில் நஷ்டம் அடையாமல் இருக்க எங்களுக்கு கம்பெனிகள் டீலர்கமிஷன் 8% வரை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்துதர கேட்டுக் கொள்கிறோம்.
3. உரம் F.O.L. சப்ளை :
குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே. ரயில் மூலம் 90% உரங்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து 3 அல்லது 4 மாவட்டங்களுக்கு 100 கிமீ வரை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கம்பெனிகள் ரயில்வே குட்ஸ் செட்டிலிருந்து குறைந்த வாடகை தொகையினை மட்டுமே கொடுத்து மீதி வாடகையை டீலர் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படுவதால் உரங்களின் அடக்கவிலை MRP -க்கு அதிகமாவதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது.
இவற்றை சரிசெய்ய அனைத்து உரங்களும் கிராமத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் வரை லாரி வாடகை FOL / DOOR Delivery முறையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
4.மானிய உரங்களுடன் இணை உரங்களை சேர்த்து வழங்குதல் -(LINK)
நாங்கள் உரங்களை கொள்முதல் செய்யும்பொழுது உற்பத்தி நிறுவனங்கள் மானிய உரங்களுடன் இணை உரங்களை சேர்த்து கட்டாயமாக எடுத்தால் மட்டுமே எங்களுக்கு உரம் கிடைக்கிறது. அவ்வாறு பெறப்படும் இணை உரங்களை நாங்கள் விவசாயிக்கு யூரியா உரத்துடன் விற்பனை செய்யும் பொழுது விவசாயிகள் வாங்க மறுப்பதால் அதனை விற்பனை செய்ய முடியவில்லை. முதலீடு தங்கி வியாபாரம் நஷ்டம் ஏற்படுகின்றது. விவசாயிகள் வேளாண்மை துறையினரிடம் புகார் தெரிவிப்பதால் வேளாண்மை துறையினரும் எங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஆகையால் உர நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு உரத்துடன் இணை உரங்களை வழங்குவதை நிறுத்த மத்திய அரசும். தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை சப்ளை செய்ய வழிவகுக்க கேட்டு கொள்கிறோம்.

5.பூச்சிமருந்து உரிமம் பிற்சேர்க்கை கட்டணம்:
நிரந்தர பூச்சிமருந்து உரிமத்தில் புதிதாக PC சேர்ப்பதற்கு கட்டணம் ஒரு பொருளுக்கு ரூ.500/- வீதம் அதிகபட்சமாக 15 பொருட்களுக்கு ரூ.7500/-வீதம் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே ரூ.7500/-செலுத்தி நிரந்தர உரிமம் பெற்ற நிலையில் மேற்படி கட்டணத்தை பழைய முறைப்படி Endorsement Fees Rs.100/- வீதம் கட்டணம் நிர்ணயம் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
6.ONLINE வர்த்தகம் :
டீலர்கள் அனைவரும் டிப்ளமோ அக்ரி 15 ஆயிரம் பேர் படித்து உரிமம் பெற்று பல ஆண்டுகள் அனுபவத்துடன் தொழில் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு நேரிடையாக தொழில் நுட்பங்களை தெரிவித்து சரியான பூச்சிமருந்துகளை பரிந்துரை செய்து வியாபாரம் செய்து வருகின்றோம். ஆகையால் விதை மற்றும் பூச்சி மருந்து ஆன்லைனில் அனுபவம் இல்லாத வர்த்தகத்திற்கு விவசாயிகள் நலன் கருதி தடைவிதிக்கவேண்டும்.
7.உரிமம் பெறுதல் :
நமது வியாபாரத்தில் உரம், பூச்சி மருந்து, விதை ஆகிய மூன்றிற்கும் தனித்தனி உரிமம் பெற்று வியாபாரம் செய்து வருகின்றோம். இவையாவும் ஒரே உரிமம் பெற்று வியாபாரம் செய்வதற்கு வழி வகுக்கக் கேட்டு கொள்கிறோம். நிரந்தர உரிமம் மெடிக்கல் லைசன்ஸ் போல இவை அனைத்திற்கும் வழங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.
8.தொழில் நுட்பபயிற்சி :
வேளாண்மை துறை மட்டும் இல்லாமல் வியாபாரிகளாகிய நாங்களும் விவசாயிகளிடம் அதிகளவில் 90% வரை நேரடி தொடர்பில் உள்ளதால் ஒவ்வொரு வருடமும் வேளாண்மை பல்கலைகழகத்தால் தெரிவிக்கப்படும் நவீன தொழில் நுட்பங்களையும், புதிய கண்டுப்பிடிப்புகள் அனைத்து விவசாயிகளிடமும் முழுமையாக சென்றடைய மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி எங்களது வியாபாரிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்ய கேட்டுக்கொள்கிறோம்
9.POS: TOP 40:
உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பொழுது ஆதார் செய்துவருகின்றோம். உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு அவருக்கு ர எண் கைரேகை வைத்து POS மூலம் பில் போடப்பட்டு விற்பனை தமி நிலம் எவ்வளவு உள்ளது? ஏற்கனவே இந்த மாதத்தில் அவர் உரம் வேறு மே வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் பொழுது ஒரு விவசாயிக்கு அதிகமாக வே எங்கும் வாங்கி உள்ளாரா? போன்ற விபரங்கள் எங்களுக்கு தெரிய வே யூரியா விற்பனை செய்ததாக கூறி வியாபாரிகள் மீது நடவடிக்கை ஏற் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகையால் ஒரு விவசாயிக்கு எத்தனை 85 மூட்டை யூரியா கொடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை POS கருவியி தொழில் நுட்பத்தை வைத்து சரி செய்து வியாபாரிகள் மீது நடவடிக்கை 12 எடுக்காத வண்ணம் ஏற்பாடு செய்து தர கேட்டுக் கொள்கிறோம்.
10.பூச்சி மருந்து மாதிரி:
பூச்சி மருந்து மாதிரி எடுக்கப்பட்டு மாதிரி தரமற்றது என்று ஆய்வுக் வழக்கு தொடாவது நடைமுறையில் உள்ளது. ஆனால் விற்பனையாளர் பூச்சி மருந்து சட்டம் பிரிவு 30(3)-விதியின் கீழ் சொல்லப்பட்டுள்ளபடி அரச உரிமம் பெற்ற கம்பெனியிலிருந்தோ, விநியோகஸ்தரிடமிருந்தோ, விற்பனையாளர்களிடமிருந்தோ, நேரிடியாக பூச்சி வாங்கியதையும், பூச்சி மருந்து சீலிடப்பட்ட பொட்டியாகவும், சீல் உடைக்கப்படாமலும் சேதமடையாமலும் நல்ல முறையில் அதாவது வாங்கும்போது இருந்த அதே நிலையில் வைக்கப்பட்டிருந்தது உறுதியாகும் நிலையில் அந்த விற்பனையாளர் அந்த பூச்சி மருந்தின் தரத்திற்கு எவ்விதத்திலும் பொறுப்பானவர் அல்ல என்பதால் அந்த விற்பளையாளர் மீது வழக்கு தொடர எவ்வித முகாந்திரமும் இல்லை எனவே, இம்மாதிரியான நிலைகளில் விற்பனையாளர் மீது வழக்கு தொடராமல் சாட்சியாக மட்டும் வழக்கில் சேர்க்கவேண்டுமென மாதிரி எடுக்கும் பூச்சி மருந்து ஆய்வாளர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறையை நமது வேளாண்மை ஆணையர் அவர்கள் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு சட்டத்தினை மாற்ற வேண்டும் எனவும் இம்மாமன்றம் நமது மரியாதைக்குரிய வேளாண்மை ஆணையரைக் கேட்டுக்கொள்கிறது.

11.ஆலோசனை கமிட்டி கூட்டம்:
உரங்கள் FOL டெலிவரி. இணைப்பு பொருட்கள் விநியோகம், டீலர் கமிஷன் 8%. புதிய சட்டத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதித்து, உரிய தீர்வுக்கான விற்பனையாளர்கள். உர நிறுவன மேலாளர்கள். மத்திய வேளாண்மை துறை அதிகாரிகள், மாநில வேளாண்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தினை மாண்புமிகு வேளாண்மைதுறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்து எங்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான கேட்டுக்கொள்கிறோம்.
12.வேளாண் பல்கலைகழகத்திற்கு கோரிக்கை:
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அனைத்து கண்டுபிடிப்புகளையும் பயிர் சம்மந்தமான அனைத்து வழிமுறைகளும். பாதுகாப்பு முறைகளும், காலநிலை மாற்றத்தின் செய்திகள் போன்ற அனைத்து பதிவுகளும் தனியார் கடைக்கு தனி மொபைல் போன் ஆப் உருவாக்கி வேளாண், விவசாயிகளுக்கு அனைத்து செய்தியும் ‘சென்றடைய செய்து கொடுக்க வேண்டுகிறோம்.
வேளாண்துறை சம்மந்தமாக மத்திய, மாநில அரசின் அனைத்து சட்டங்கள் விதிமுறைகள் அனைத்தும் பார்க்கும் நிலையில் தனியார்க்கு என்று தனி மொபைல் போன் ஆப் ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
13.நுண்ணூட்ட உரங்கள் :
1985 ஆம் ஆண்டு அன்றைய பல்கலைக்கழகத்தின் கமிட்டி உறுப்பினர் திரு.தி. சம்பூர்ணநாராயணண் அவர்கள், மண் குறைபாடுகளை ஆய்வு செய்து அதை 6 வகைகளாக வகைப்படுத்தி நுண்ணூட்ட உரங்களை பயிர் வாரியாக ரேஷியோ அளவு அமைத்து அதன்படி மிக்சர் NO 1 TO 12 வெளியீட்டு சட்டம் வகுத்து மாநில அரசிடம் லைசென்ஸ் வழங்கப்பட்டு உற்பத்தியும், வியாபாரம் மூலம் நடைபெறுகின்றது அதனால் 40 ஆண்டு கழித்து பல வகையில் பல ஊர் மண் பல விதத்திலும் சத்து குறைபாடு வந்து சத்துபற்றாக்குறையால் நோய் அதிகம் வருகிறது. அதனால் தற்போது புது ஆய்வு செய்து பயிர் வாரியாக 20 வகையை உற்பத்தி பிரித்து லைசன்ஸ் வழங்க வேண்டும்.
14.மண் வளத்தை காத்திட ஆர்கானிக்:
ஆர்கானிக் ஆர்கானிக் என்று பேசப்படுகிறது. தேவைப்படுகிறது இன்றையநிலை, மாட்டுஎரு. ஆட்டு எரு. கோழிஎரு, பயோ கம்போஸ்ட் சிட்டி கம்போஸ்ட் மண் புழு உரம். புண்ணாக்கு, தமிழகத்தில் உள்ள 1.5 கோடி ஏக்கர் தேவைக்கு 15 சதவீதம் மட்டுமே கிடைக்கின்றது. அதுவும் சிறு குறு விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு. தழை வகை சத்து
A. வெப்பநிலை 2 சதவீதம் கூடிவிட்டதால் மண்ணின் நுண்ணுயிர்கள் குறைந்து மண் வளம் குறைகிறது. அதிக அளவில் ரசாயன உரங்கள் களைக்கொல்லி, பூச்சிமருந்து பயன்பாட்டிலும் மண்வளம் நுண்ணுயிர் அழிகிறது.
B. சத்து பற்றாக்குறையால் நோய் பூச்சி, வைரஸ் தாக்குதலால் மகசூலும் குறைகிறது. அதற்கு தீர்வு ஆர்கானிக் தான்.
C. உலக அளவில் 7 கோடி டன் கடல் பாசி வளர்கிறது. நிலத்தில் விளையும் தாவரங்களைவிட 9 பங்கு கூடுதலாக விளைகிறது. அதில் 10 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுகிறது.
D. இந்தியா முழுவதும் உள்ள 45 கோடி சாகுபடி நிலத்திற்கு 5 லட்சம் டன் கடல்பாசி போதுமானது.
E.மாநில அரசு, மத்திய அரசிடம் யூரியா ரசாயன உற்பத்திக்கு கொடுக்கும் மானியம் ஒரு மூட்டைக்கு ரூ.1750/- தருவதை குறைத்து.கடல் தாவரத்தின் ஆர்கானிக் உரங்களை அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி மண்ணை காத்திட, மகசூல் பெருக்கிட வேண்டுகிறோம்.

