திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலை புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (14.8.2025) உணவு பாதுகாப்பு துறையின் காலாண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு துறையின் காலாண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடைசெய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (14.8.2025) நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்படுத்துவதை தடுத்திடும் வகையில் மாவட்ட அளவில் உணவகங்கள், இனிப்பகங்கள், பேக்கரி, டீ கடைகள், சிறு உணவகங்கள், சாலையோர வணிகர்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் உபயோகம் தவிர்த்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தும் வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை இல்லாத மாவட்டமாக அமையும் வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு துறையின் மூலம் வெளியிடப்பட்ட சற்றே குறைப்போம் உணவில் உப்பு, உணவில் எண்ணெய் குறைவாக பயன்படுத்துதல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டு, இந்த விழிப்புணர்வு பதாகைகளை அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பாடு உள்ள இடங்களிலும், பார்வைக்கு வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட நியமன அலுவலர் .ஜெகதீஸ் சந்திர போஸ், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பினர். வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

