திருச்சி – ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (13.08.2025) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் கலந்துகொண்டு அங்கு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் அருள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


