திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 19.83 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 19.83 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (13.08.2025) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் சமூக நலத்திட்ட உதவிகள். தூய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு இயற்கை மரணம் உதவித்தொகை 18 நபர்களுக்கு ரூ.3.46,000 மதிப்பீட்டிலும், கல்வி உதவித்தொகை 203 நபர்களுக்கு ரூ.2,72,400 மதிப்பீட்டிலும், திருமணம் உதவித்தொகை 26 நபர்களுக்கு ரூ.95,000 மதிப்பீட்டிலும், மகப்பேறு உதவித்தொகை 65 நபர்களுக்கு ரூ.3,69,000 மதிப்பீட்டிலும், கருக்கலைப்பு 4 நபர்களுக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலும், கண்கண்ணாடி 16 நபர்களுக்கு ரூ.8,000 மதிப்பீட்டிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆக மொத்தம் 350 பயனாளிகளுக்கு ரூ.11,02,400 மதிப்பீட்டிலும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23 திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 8 நபர்களுக்கு ரூ.10,00,000 மதிப்பீட்டில் இருங்களூரிலும், 2 நபர்களுக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டையிலும், 2023-24 ஆம் ஆண்டில் 27 நபர்களுக்கு ரூ.27,00,000 மதிப்பீட்டில் இருங்களூர் கட்டிடம்-லும், ஆக மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டது. தற்காலிக பணியாளர்களாக பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு 2967 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 1705 Smart Card வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1262 பணியாளர்களுக்கு தலைமையிடத்தில் Smart Card அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்து திட்ட அறிக்கையாக வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி இதுவரை 25 மாவட்டத்திற்கு சென்று தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். 26 வது மாவட்டமாக இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் 2007-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அர்களின் காலத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்காலிக தூய்மைப் பணிபுரிவோரை நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து, தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு பணி மேற்கொண்டதன் அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், மேலும் நான் தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் என்னுடைய குழு உறுப்பினர்களை கொண்டு 3 இலட்சத்து 20 ஆயிரம் தூய்மைப்பணியாள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் சுமார் 10 இலட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் இந்த நலவாரியத்தில் தனியார் தொழிற்சாலைகள், உணவகங்கள், விடுதிகளில் பணியாற்றி கொண்டு இருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களை உறுப்பினராக சேர்த்து பிப்ரவரி மாதத்திற்குள் 10 இலட்சம் தூய்மை பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டிற்கு 15 கோடி ரூபாய் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் ரூபாய் 4.37 கோடி செலவழிக்கப்பட்டு ரூபாய் 40 கோடி அளவில் கையிருப்பில் உள்ளது. இந்த நிதி முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் தான் செலவழிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு உதவித்தொகையாக 20 இலட்சத்திலிருந்து 35 இலட்சமாக உயர்த்தி வழங்க நாங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளோம். அக்கோரிக்கையினை ஏற்று நல்ல வாய்ப்பினை தருவார்கள். அதேபோல் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் விபத்து மரணம் ரூ.5 இலட்சமாக உள்ளதை ரூ.8 இலட்சமாக உயர்த்த கடந்த மாதம் நடைபெற்ற வாரியக் குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே எல்லா நிலைகளிலும் தூய்மைப் பணியாளர்களை பாதுகாப்போம் மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலை செய்ய சொல்லி யாராவது கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 3 கோடி மதிப்பீட்டில் பாதள சாக்டை அடைப்பை நீக்க இயந்திரம் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும், மாதந்தோறும் தூய்மை பணியாளர்களுக்கும் ஒரு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தபோது உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை இக்கூட்டம் நடத்திடலாம் என தெரிவித்தார்கள். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொள்ளும் போது முகக்கவசம், கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். படித்தால்தான் சமுதாயம் முன்னேறும். கல்விக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தாட்கோ தூய்மைப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சியில் பணிபுரியும் 15 நபர்களுக்கு சிறுதொழில் கடனாக தலா ரூ.50,000 வீதம் ரூ.7,50,000 மும், தொட்டியம் பேரூராட்சிகளில் பணிபுரியும் 24 நபர்களுக்கு சிறுதொழில் கடனாக தலா ரூ.50,000 வீதம் ரூ.12,00,000 மும், ஆக மொத்தம் 39 நபர்களுக்கு ரூ.19,50,000 கடனுதவி களும் மற்றும் இயற்கை மரணம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.33.500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் ரூ.19,83,500 மதிப்பீட்டில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், தூய்மைப் பணியாளர் 1560 வாரியத்துணைத் தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், மாநில உறுப்பினர் ந.சேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார். மாநகர் நல அலுவலர் மரு.விஜய்சந்திரன், திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.துவாரகநாத்சிங், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


