திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் 3-வது நாள் உயிரிழப்பு . குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி பகுதியை சேர்ந்த திருமதி.ஜெயராணி
க/பெ.ஜான்சன் என்பவர் 01:11:2025 அன்று பிரசவத்திற்காக திருச்சிராப்பள்ளி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு 03.11.2025 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைபேறிற்கு பிறகு கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்ற அவர் 11.11.2025 அன்று இறந்துள்ளார். மேற்படி இறப்பு தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நான்கு குழந்தைபேறு இறப்பு (Maternal Death) தொடர்பாகவும், விசாரணை மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி, நெடுஞ்சாலைகள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) தலைவராகவும், இரண்டு மருத்துவர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

