போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி ஜூலை 24 திருச்சி கே.கே.நகர் போலீசரகம் ஈ.வி.ஆர்.ரோடு அரிசி குடோன் அருகில் அம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, இளைஞர்களுக்கு கேடு விளைவிக்கும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை சப்ளை, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் யபிஸ் ராஜா, மணிகண்டன் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

