மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு.அ.ரேவந்த் ரெட்டி அவர்கள் ஆகியோர் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில்

0 4

       

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு.அ.ரேவந்த் ரெட்டி அவர்கள் ஆகியோர் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிகழ்வு இன்று (25.09.2025) திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மாணவ, மாணவிகள் பார்வையிடும் வண்ணம் நேரலையில் ஒளிப்பரப்பபட்டது.

     இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

            இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம்) திரு.பாலாஜி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மண்டல இணை இயக்குநர் முனைவர் கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.விஜயலட்சுமி, கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரத்தினம், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.