கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது - தொடர்பாக

தலைப்பு : கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது – தொடர்பாக
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டைகாரன்மேடு கிராமத்தில் வசித்து வரும் மைதிலி, க/பெ. சம்பத் என்பவர் கடந்த 18.10.2024 அன்று அவரது வீட்டின் தோட்ட வேலைக்காகவும், வீட்டில் வேறு சில வேலைகள் செய்யவும், பாபு (45/24), த/பெ. துரைராஜ், வ.உ.சி நகர், மாரியம்மன் கோவில் 5வது ரோடு, கரூர் மாவட்டம், தற்போதைய முகவரி சிங்காரவேலன் நகர், சமயபுரம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா, திருச்சி மாவட்டம் என்பவரை அழைத்த போது, வீட்டிற்கு வந்த பாபு சிறிது நேரத்தில் மைதிலியிடம் அவரது நகைகள் எங்கு உள்ளது என கேட்டு மிரட்டியபோது, மைதிலி கூற மறுத்ததால், மைதிலி மற்றும் வீட்டிலிருந்த மைதிலியின் கணவர் சம்பத் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சி செய்து, சம்பத் அணிந்திருந்த 3 சவரண் நகை மற்றும் வீட்டிலிருந்த TVS XL, TN 48 U 2881 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 18.10.2024-ம் தேதி சமயபுரம் காவல் நிலைய 5 . 325/24, 8/1 332. 109(1), 309(6) r/w 311 BNS- 4 ए फ्री செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகளான (1) பாபு (45/24) மற்றும் (2) பாபு மனைவி கவிதா ஆகிய இருவரும் 19.10.2024 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் (II -ADJ) நடைபெற்று வந்தது.
2) மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (05.12.2025), இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. கோபிநாதன் (II -ADJ) அவர்கள் எதிரி-1 பாபு, த/பெ. துரைராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2,000/- அபராதம் விதித்தும், எதிரி-2 கவிதா என்பவரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.
3) இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த சமயபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் 1748 திரு.விக்னேஷ், என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

